Advertisement

👇கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பவும்👇
>>

August 29 is a holiday for schools and colleges!!

ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கடவுளின் தேசம் கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு பாரம்பரிய திருவிழா ஆகும். மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தி ஒப்புக் கொண்டார் . வாமனர் முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்தார்.

மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என வரம் கேட்டார். அதனை ஏற்று வாமனர் அருள் புரிந்ததாக வரலாறு. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்பதற்காக ஒவ்வொரு வருடமும் ஓணத்திருநாளை திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்.

ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . அன்று பள்ளி , கல்லூரிகள் , அரசு அலுவலகங்கள் செயல்படாது. குறைந்த அளவு பணியாளர்களுடன் அரசு கருவூலங்கள் செயல்ப்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 2ம் தேதி முழு நேர பணீ நாளாக செயல்படும் எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

New Model Syllabus Announcement: Tamil Nadu Higher Education Descriptive Report Released..!!

புதிய மாதிரி பாடத்திட்ட அறிவிப்பு: தமிழ்நாடு உயர்கல்வித்துறை விளக்க அறிக்கை வெளியீடு..!!

புதிய மாதிரி பாடத்திட்ட அறிவிப்பு குறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்; தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு இல்லாத வகையிலேயே மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதே ஆகும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாடப் பிரிவுகளுக்கு இடையே 75% இணைத்தன்மை இல்லை என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பாடப் பிரிவுகளுக்கு இடையே இணைத்தன்மை இல்லாததால் மாணவர்கள் பணியில் சேர சிரமப்படுகின்றனர். உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே மாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலேயே மாதிரி பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2018-19-க்குப் பின் சில உயர்கல்வி நிறுவனங்களில் பாடத் திட்டம் மறுசீரமைக்கப்படாததை ஈடுசெய்யவே மாதிரி பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மாதிரி பாடத்திட்டத்தின் உயரிய நோக்கம் கல்வியாளரிடையே சரியாகச் சென்றடையும் பொருட்டே விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் ஓராண்டாக மேற்கொண்ட முயற்சியால் புதிய மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஐஐடி, அண்ணா பல்கலைகழகம் , 10 கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகளின் பேராசிரியர்கள் பாடத்திட்ட சீரமைப்பில் 922 பேராசிரியர்களை கொண்டு 870 கூட்டங்கள் நடத்தப்பட்டு 301 மாதிரி பாடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மாதிரி பாடத்திட்டங்கள் மறுசீரமைப்பு தொடர்பாக தொழில்துறையினரின் ஆலோசனையும் பெறப்பட்டது. நான் முதல்வன் மற்றும் திறன் மேம்பாட்டு திட்ட நோக்கங்களுக்கு ஏற்ப புதிய மாதிரி பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

Government school students can get Rs. 1000 per month... Tamil Nadu Government released an important announcement..!

அரசு பள்ளி மாணவர்கள் மாதம் ரூ.1000 பெறலாம்... தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான திறனாய்வுத் தேர்வுக்கு வருகின்ற 7 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அரசு பள்ளி மாணவ மாணவியர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நடப்பு 2023-2024 கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு நடத்தப்படவுள்ளது . அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் .

 

நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டை பின்பற்றி தலா 500 மாணவ, மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் இந்த தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இந்த தொகை மாணவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

 

இதற்கான திறனாய்வுத் தேர்வு, தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கணிதம் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில், இரு தாள்களாக தேர்வு நடத்தப்படும். இதற்காக, விண்ணப்பங்களை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற 7 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற 18 ஆம் தேதிக்குக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதையடுத்து, திறனாய்வுத் தேர்வு வருகின்ற செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

August 3 is a local holiday for all these districts... Collector's order!

ஆகஸ்ட் 3ம் தேதி இந்த மாவட்டங்களுக்கு எல்லாம் உள்ளூர் விடுமுறை... கலெக்டர் உத்தரவு!

நாளை மறுதினம் ஆகஸ்ட் 3ம் தேதி தமிழகத்தில் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திற்கு, சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதே போன்று அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்திற்கு ஈடாக எதிர்வரும் 12 ம் தேதியன்று வேலை நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதே போன்று சேலம் மாவட்டத்திற்கு தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அரசு கருவூலகங்கள், முக்கிய அலுவலகங்கள் ஆகியவை குறைந்த ஊழியர்களுடன் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போன்று கடையெழு மன்னர்களில் ஒருவரான வல்வில் ஓரி விழாவினை முன்னிட்டு, ஆகஸ்ட் 3ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார். 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

ஒரே வருஷத்தில் 67 சதவீதம் அளவில் முன்னேற்றம் கண்டு கர்நாடகாவை சேர்ந்த அரசு பள்ளிகள் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
அடித்து கொளுத்த போகும் கனமழை.. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. திடீர் அறிவிப்பு

நாளை கனமழை பெய்யவுள்ளதால் புதுச்சேரியின் மாஹே பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
நாளை விடுமுறை கிடையாது!! மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க!!

சென்னையில்  தொடர் கனமழை காரணமாக ஜூன் 19ம் தேதி  திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.   அதனை ஈடு செய்யும் வகையில் ஜூலை 22ம் தேதி சனிக்கிழமை நாளை 6முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  பிறப்பித்துள்ளார்.  

 

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  “ கனமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து  பள்ளிகளுக்கும் 19.06.2023 திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாளை ஈடு செய்திடும் வகையில் 22.07.2023 அன்று (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு  பணிநாளாக செயல்படும்.

 

நாளைய தினம் திங்கட் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக செயல்பட வேண்டும் என  அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் /முதல்வர்களும்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
க்யூட் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.!

புதிய கல்வி கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு க்யூட் (CUET) எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு (Common university entrance test ) நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வு முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் 295 நகரங்களில் நடந்த க்யூட் நுழைவுத்தேர்வை 9,76,908 மாணவர்கள் எழுதினர்.

தேர்வு முடிவுகளை http://www.cuet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என தேசிய கல்வி முகமை தெரிவித்து உள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் – பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு புதிதாக மின்னஞ்சல் முகவரி தொடங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் படி தற்போது நவீன மயமாகும் காலத்தில் அனைத்து முக்கிய செய்திகளும் மின்னஞ்சல் மூலமாக பகிர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன் படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து பள்ளிகளிலும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் மாணவர்கள் இந்த மாதம் ஜூலை 30ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி தொடங்க தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்கள் உதவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
சிபிஎஸ்இ பொது தேர்வு தேதி அறிவிப்பு!!

சென்னை: சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பள்ளிக்கல்வித் துறை வெளியிடும் ஆண்டு நாட்காட்டியில் இடம்பெற்றிருக்கும்.

அந்த வகையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 18-ம் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.8-ம் தேதியும் பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.

 

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு அந்த தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இருந்து வந்தது. இந்நிலையில், பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்.15 முதல் மார்ச் 21-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.17 முதல் ஏப்.10-ம்தேதி வரையும் பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 2 of 86 )   NEXT |  LAST